சாக்ரடீஸ் நாடகம் (Socrates - Sivaji Ganesan as Socrates)
சாக்ரடீஸ் நாடகம் முதல் காட்சி சாக்ரடீஸ்: உன்னையே நீ அறிவாய்!! உன்னையே நீ அறிவாய்!! கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாததல்ல அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயலுவது புண்ணுக்கு புனுகு தடவு வேலையை போன்றது அதனால் தான் தோழர்களே சிந்திக்க கற்றுகொள்ளுங்கள் என்று சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன் அறிவு! அறிவு! அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அதை தேடி பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன் உன்னையே நீ அறிவாய்!! இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதர்க்காகத்தான் என் உயிரினும் இனியவர்களே உங்களையெல்லாம் அழைக்கிறேன் ஏற்றமிகு ஏதன்சு நகர எழில்மிக்க வாலிபர்களே! நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமிழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன் ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால் தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மட்டும் போதாது தீரர்களே இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்து கொள்ளுங்கள் அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி மெலிடஸ்: ஹஹ ஹஹ.. அறிவாயுதமாம் அனைத்துலகும் அடிபணியும் அஸ்திரமாம் குமுறும் எரிம...