Posts

Showing posts with the label பாசம் (Paasam)

எங்கே அந்த வெண்ணிலா (Engae antha vennila)

Image
படம்: வருஷமெல்லாம் வசந்தம் (Varushamellam Vasantham) பாடல்: எங்கே அந்த வெண்ணிலா உணர்வு: பாசம் ஆக்கம்: பழனி பாரதி பாடியவர்: உன்னி மேனன் எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா கல்லை கனியாக்கினாள் முள்ளை மலராக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீ தான் எந்தன் ஒளிவிளக்கு என்றும் நீ தான் எந்தன் ஒளிவிளக்கு எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வழிய...

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (Rosapoo chinna rosapoo)

Image
படம்: சூரியவம்சம் (Suriyavamsam) பாடல்: ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உணர்வு: பாசம் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேர சொல்லும் ரோசாப்பூ ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேர சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக எம் பாட்டு மட்டும் துணையாக காத்தில் ஆடும் தனியாக எம் பாட்டு மட்டும் துணையாக ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேர சொல்லும் ரோசாப்பூ  மனசெல்லாம் பந்தலிட்டு மல்லி கொடியாக உன்ன விட்டேன் உசுருக்குள் கோயில் கட்டி உன்ன கொலு வச்சு கொண்டாடினேன் மழை பேஞ்சா தானே மண் வாசம் உன்ன நெனச்சாலே பூ வாசம் தான் பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேர சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக  கண்ணாடி பாக்கையில அங்க முன்னாடி உன் முகம் தான் கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசா என் மனம் தான் நிழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா மலைமேல் விளக்கா ஏத்தி வைப்பேன் உன்ன படம் போல் மனசில் மாட்டி வைப்பேன் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேர சொல்லும் ரோசாப்பூ ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேர சொல்லும் ரோசாப்பூ க...

தென்பாண்டி தமிழே (Thenpaandi thamizhe)

படம்: பாசப்பறவைகள் உணர்வு: பாசம் ஆக்கம்: மு. கருணாநிதி தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் பாசமென்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம் தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே அன்பு என்னும் கூண்டிலே ஆடிப்பாடும் பூங்குயில் ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே தாயை போல பார்கிறேன் வேறு பார்வை இல்லையே மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே  தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் பாசமென்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம் தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா கோவில் தேவையில்ல...

தாஜ்மஹாலே நீ தாவித்தாவி (Tajmahalae nee thavithavi)

படம்:  பெரிய தம்பி உணர்வு: பாசம் தாஜ்மஹாலே நீ தாவித்தாவி எந்தன் வாசல் வந்தது என்ன தங்கனிலாவே நீ விண்ணை விட்டு என்னை காண வந்தது என்ன உயிர் தொட்ட உறவே ஆ.... நான் எந்தன் வாழ்வில் உன்னை தேடி அலைந்தது என்ன உன் பாதம் பட்ட உன் காற்று பட்ட என் சோலை இன்று பூத்ததென்ன தாஜ்மஹாலே நீ தாவித்தாவி எந்தன் வாசல் வந்தது என்ன உள்ளம் முழுக்க நேசம் வைத்தால் குறை தெரியாது வெள்ளி நிலவை கண்கள் ரசித்தால் கரை தெரியாது உள்ளம் முழுக்க நேசம் வைத்தால் குறை தெரியாது வெள்ளி நிலவை கண்கள் ரசித்தால் கரை தெரியாது கண்ணே உன் முகம் கண்டதும் என் மனம் காதல் கொண்டது காதல் கொண்டது கண்ணே உன் மனம் கண்டதும் என் விழி ஏனோ கொண்டது கண்ணீர் கண்ணே உன் முகம் கண்டதும் என் மனம் காதல் கொண்டது காதல் கொண்டது கண்ணே உன் மனம் கண்டதும் என் விழி ஏனோ கொண்டது கண்ணீர் ஒரே மனம் ஒரே குணம் ஒரே நிலை இன்பம் தாஜ்மஹாலே நீ தாவித்தாவி எந்தன் வாசல் வந்தது என்ன எந்தன் பெயரை உந்தன் உயிரில் எழுதி வைப்பாயா இன்னும் சில நாள் சென்ற பிறகு மறந்து வைப்பாயா எந்தன் பெயரை உந்தன் உயிரில் எழுதி வைப்பாயா இன்னும் சில நாள் சென்ற பிறகு மறந்...

மலர்ந்தும் மலராத (Malarnthum malaraatha)

படம்:  பாசமலர் உணர்வு: பாசம், தாலாட்டு, வேதனை மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழிவண்ணமே வந்து விடிந்து விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழிவண்ணமே வந்து விடிந்து விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே யானை படைகொண்டு சேனை பலவென்று ஆளப்பிறந்தாயடா புவி ஆளப்பிறந்தாயடா அத்தை மகளை மனம் கொண்டு இளமை வழி கண்டு வாழப்பிறந்தாயடா வாழப்பிறந்தாயடா அத்தை மகளை மனம் கொண்டு இளமை வழி கண்டு அத்தை மகளை மனம் கொண்டு இளமை வழி கண்டு வாழப்பிறந்தாயடா வாழப்பிறந்தாயடா தங்க கடியாரம் வைர மணியாரம் தந்து விலை பேசுவார் பொருள் தந்து மனம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் ...

நாளை நமதே (Naalai namathae)

படம்:  நாளை நமதே உணர்வு: பாசம் அன்பு மலர்களே நம்பி இருங்களேன் நாளை நமதே இந்த நாளும் நமதே தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே நாளை நமதே இந்த நாளும் நமதே தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும் நமக்கென்ன வளர்ந்து நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே பாசம் எனும் நூல் வழி வந்த பாச மலர் கூட்டம் ஆடும் அழகில் அமைந்தது தானே வாழ்க்கை பூந்தோட்டம் பாசம் எனும் நூல் வழி வந்த பாச மலர் கூட்டம் ஆடும் அழகில் அமைந்தது தானே வாழ்க்கை பூந்தோட்டம் மூன்று தமிழும் ஓரினம் என்று பாட வேண்டும் காவிய சிந்து மூன்று தமிழும் ஓரினம் என்று பாட வேண்டும் காவிய சிந்து அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது நாளை நமதே நாளை நமதே வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே நல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களேன் நாடும் வீடும் உங்களை நம்பி நீங்கள் தானே அண்ணன் தம்பி எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது நாளை நமதே நாளை நமதே தாய் வழி வ...

பழமுதிர் சோலை எனக்காக தான் (Pazhamuthir solai)

படம்: வருஷம் 16 உணர்வு: வியப்பு, பாசம் பழமுதிர் சோலை எனக்காக தான் படைத்தவன் படைத்தான் அதற்காக தான் நான் தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் நான் தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம் பழமுதிர் சோலை எனக்காக தான் படைத்தவன் படைத்தான் அதற்காக தான் தூரத்தில் போகின்ற மேகங்களே தூறல்கள் போடுங்கள் பூமியிலே வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட ஏரியில் மீன் கோதும் நாரைகளே இறகுகள் எனக்கில்லை தாருங்களேன் ஊர் விட்டு ஊர்சென்று காவியம் பாட பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும் பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும் ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே பழமுதிர் சோலை எனக்காக தான் படைத்தவன் படைத்தான் அதற்காக தான் பந்தங்கள் யாவும் தொடர்கதை போல் நாளும் வளர்ந்திடும் நினைவுகளால் நூலிடை போலிங்கு நெருங்கிய இதயங்கள் பாலுடன் நெய்யுடன் கலந்திடும் நாள் தந்தையும் தாயும் மகிழ்ந்து குழவி சிந்தை இனித்திட உறவுகள் மேவி பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை...

பூவே செம்பூவே உன் வாசம் வரும் (Poovae semboovae)

படம்: சொல்ல துடிக்குது மனசு உணர்வு: பாசம் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாற கூடும் நான் கொண்ட பாசம் தடம் மாறிடாது நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே உனைப்போல நானும்  ஒரு பிள்ளை தானே மலர் வந்து கொஞ்சும் கிளிபிள்ளை தானே உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதியென்னும் நூலில் விளையாடும் பொம்மை நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்ப...

உன்னை காணாத (Unnai kaanatha)

Image
படம்: இதய கமலம் உணர்வு: பாசம் உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல இங்கு நீயொரு பாதி நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி இங்கு நீயொரு பாதி நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலுமில்லை ஒரு கோவிலில்லாமல் தீபமுமில்லை ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலுமில்லை ஒரு கோவிலில்லாமல் தீபமுமில்லை நீயெந்தன் கோவில் நான் அங்கு தீபம் தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல என்மேனியில் உன்னை பிள்ளையை போலே நான் வாரி அணைப்பேன் ஆசையினாலே என்மேனியில் உன்னை பிள்ளையை போலே நான் வாரி அண...

கண்ணின் காந்தமே வேண்டாம் (Kannin ganthamae vendam)

படம்: மௌனம் பேசியதே கண்ணின் காந்தமே வேண்டாம் உன் மனதின் சாந்தமே போதும் நம் உள்ளம் உறங்கவே வேண்டாம் நம் விழிகள் உறங்கினால் போதும் தடைகள் இனியில்லை வாழ்வில் நாம் விண்ணை தாண்டியே போவோம் அழகே அமுதே கண்ணின் காந்தமே வேண்டாம் உன் மனதின் சாந்தமே போதும் நம் உள்ளம் உறங்கவே வேண்டாம் நம் விழிகள் உறங்கினால் போதும் தடைகள் இனியில்லை வாழ்வில் நாம் விண்ணை தாண்டியே போவோம் யாரோடும் வாழும் வாழ்க்கை அது வேண்டாம் பெண்ணே உயிரோடு வாழும் காலம் அது உனக்கு மட்டுமே நீயெந்தன் மடி சேர ஒரு போர்வைக்குள் துயில் கொள்ள உன் கண்ணீரை துடைத்து கொள்ளு ஏ பெண்ணே கடல் வானும் காதல் செய்யும் நம் பின்னே உன்னில் நிறைஞ்சிருக்கேன் எனக்கே தெரியலையே பெண்ணை நான் பிறந்த ரகசியம் புரிகிறதே கண்ணின் காந்தமே வேண்டாம் உன் மனதின் சாந்தமே போதும் நம் உள்ளம் உறங்கவே வேண்டாம் நம் விழிகள் உறங்கினால் போதும் தடைகள் இனியில்லை வாழ்வில் நாம் விண்ணை தாண்டியே போவோம் அழகே அமுதே நான் சேர்ந்த சொந்தம் நீ தான் நீ இரண்டாம் தாயே தவமாக கிடந்தேன் தனியே நான் உன்னில் கலக்கவே தனிமைக்கே விடுமுறையா நாம் இதழ் சேர்ப்போம் ...

ஊதா ஊதா ஊதாப்பூ (Ootha ootha oothapoo)

Image
படம்: மின்சார கண்ணா உணர்வு: பாசம் ஊதா ஊதா ஊதாப்பூ ஊதும் வண்டு ஊதாப்பூ ஊதா ஊதா ஊதாப்பூ ஊதக்காற்று மோதாப்பூ நான் பார்த்தால் ஊதாப்பூவே நாலாம் தானா ஊதாப்பூவே தேன் வார்த்த ஊதாப்பூவே சுகம் தானா ஊதாப்பூவே ஊதா ஊதா ஊதாப்பூ இன்றும் என்றும் உதிராப்பூ ஊதா ஊதா ஊதாப்பூ ஊதும் வண்டு ஊதாப்பூ ஊதா ஊதா ஊதாப்பூ ஊதக்காற்று மோதாப்பூ நீ  பார்த்தால் ஊதாப்பூவே நலமாகும் ஊதாப்பூவே தோள் சேர்த்தல் ஊதாப்பூவே சுகம் காணும் ஊதாப்பூவே ஊதா ஊதா ஊதாப்பூ உன்னை நீங்கி வாழாப்பூ ஓர் உயில் தீட்டி வைத்தேன் நான் உனக்காக என்று என் உயிர் கூட இல்லை இனி எனக்காக என்று ஓர் நெடும்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று எனை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கே என்று உன்னில் நான் ஒருபாதி என்றே தெரியாதோ அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ ஊதா ஊதா ஊதாப்பூ உன் பேர் தவிர ஓதா பூ உன் மழைகூந்தல் மீது என் மனப்பூவை வைத்தேன் ஓர் உயிர் நூலைக்கொண்டு இரு உடல் சேர தைத்தேன் உன் விழிப்பார்வை அன்று என்னை ஒரு விலை பேசக்கண்டேன் நீ எனை வாங்கும் முன்பு நான் உனை வாங்கி கொண்டேன் எந்தன் காதலி சொல்வதே இனி ஆணை என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை ஊ...

தொடு தொடுவெனவே (Thodu thoduvenavae)

படம்: துள்ளாத மனமும் துள்ளும் ஆக்கம்: வைரமுத்து தொடு தொடுவெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம் விடு விடுவெனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும் மன்னவா ஒரு கோயில் போல் இந்த மாளிகை எதற்காக தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக வானில் ஒரு புயல் மழை வந்தால் அன்பே எனை எங்கனம் காப்பாய் கண்ணே உன்னை என்கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன் சாத்தியமாகுமா நான் சத்தியம் செய்யவா இந்த பூமியே திர்ந்துபோய்விடில் என்னை எங்கு சேர்ப்பாய் நட்சத்திரங்களை தூசு தட்டி நான் நல்ல வீடு செய்வேன் நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகி போய்விடில் என் செய்வாய் உருகிய துளிகளை ஒன்றாக்கி என்னுயிர் தந்தே உயிர் தருவேன் ஏ ராஜா இது மெய் தானா ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை நான் நம்புகிறேன் உன்னை தொடு தொடுவெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம் விடு விடுவெனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும் நீச்சல் குளமிருக்கு நீரும் இல்லை எதில் எங்கு நீச்சல் அடிக்க அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும் இந்த அல்லிராணி குளிக்க இந்த ரீதியில் ...

இது சங்கீத திருநாளோ (Ithu sangeetha thirunaalo)

படம்: காதலுக்கு மரியாதை உணர்வு: பாசம் இது சங்கீத திருநாளோ புது சந்தோசம் தரும் நாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ சிறு பூவாக மலர்ந்தாளோ சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள் முத்த மழை கன்னம் விழ நனைந்தாளே கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே  (இது சங்கீத திருநாளோ.....) கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள் கண்களை பின்புறம் வந்து மூடுவாள் செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள் தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள் உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள் அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள் பூவெல்லாம் இவள் போல அழகில்லை பூங்காற்று இவள் போல சுகம் இல்லை இது போல சொந்தங்கள் இனி இல்லை எப்போதும் அன்புக்கு அழிவில்லை இவள் தானே நம் தேவதை இது சங்கீத திருநாளோ புது சந்தோசம் தரும் நாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ சிறு பூவாக மலர்ந்தாளோ நடக்கும் நடையில் ஒரு தேர்வலம் சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம் கண்ணில் மின்னும் ஒரு காவியம் மனதில் வரைந்து வைத்த ஓவியம் நினைவில் நனைந்து நிற்கும் பூவனம் என்றும் எங்கும் இவள் ஞாபகம் இவள் போகும் வழி எங்கும் பூவாவேன் இரு பக்கம் காக்...