Posts

Showing posts with the label தவிப்பு (Thavippu)

மின்னல் ஒரு கோடி (Minnal oru kodi)

படம்: V.I.P உணர்வு: ஏக்கம், தவிப்பு மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே உன் வார்த்தை தேன் வார்த்ததே மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ.. லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே உன் வார்த்தை தேன் வார்த்ததே மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே ஏழை தேடிய ராணி நீயென் காதல் தேவதையே மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ குளிரும் பணியும் எனை சுடுதே சுடுதே உடலும் உயிரும் இனி தனியே தனியே காமன் நிலவே எனை ஆளும் அழகே உறவே உறவே இங்கு சரியோ பிரிவே நீராகினால் நான் மழையாகிறேன் நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன் என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன் ஓ காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன் என் வார்த்தை உன் வாழ்க்கையோ மழையில் நனையும்  பனிமலரை போலே என் மனமே நனைந்தேன் உன் நினைவில் நானும் ஓ உலகை தழுவும் நல்லிரவை போலே என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே எனை மீட்டியே நீ இசையாகினாய் உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய் மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே ஓ.. லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்த...

மன்றம் வந்த தென்றலுக்கு (Mandram vantha thendralukku)

படம்: மௌன ராகம் உணர்வு: வேதனை, தவிப்பு ஆக்கம்: வாலி மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்டநிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே மேடையை போலே வாழ்க்கையென்ன நாடகம் ஆனதும் விலகிச்செல்ல ஓடையை போலே உறவுமல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல என்னோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்  என்னோடு நீ வந்தால் என்ன வா மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்டநிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன சொந்தங்களே இல்லாமல் பந்தபாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கை தான் என்ன சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே ...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

படம்: நெஞ்சில் ஒரு ஆலயம் உணர்வு: தவிப்பு ஆக்கம்: கண்ணதாசன் பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் ...

ஓராயிரம் பார்வையிலே (Orayiram paarvayilae)

படம்: வல்லவனுக்கு வல்லவன் உணர்வு: தவிப்பு நூறுமுறை பிறந்தாலும்  நூறுமுறை இறந்தாலும் உனைபிரிந்து வெகு தூரம் நான்  ஒருநாளும் போவதில்லை உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும் ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன்காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் இந்த மானிட காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும் அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும் நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன்காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் இந்த காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களை தழுவுகின்றேன் இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆடையில் ஆடுகின்றேன் நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன்காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

ஓடும் மேகங்களே (Odum maegangalae)

படம்: ஆயிரத்தில் ஒருவன் உணர்வு: தவிப்பு ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு இதில் நான் அந்த மான்  நெஞ்சை நாடுவதெங்கே கூறு ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு பாதியிலே வெகு தூரம் பயணம் போகின்ற நேரம் காதலை யார் மனம் தேடும் இதில் நான் அந்த மான்  நெஞ்சை நாடுவதெங்கே கூறு ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தா...

காதோடு தான் நான் பாடுவேன் (Kaathodu thaan naan paduvaen)

படம்: வெள்ளி விழா உணர்வு: தவிப்பு காதோடு தான் நான் பாடுவேன் மலரோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன் மலரோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன் வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான் நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான் வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான் நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான் உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா குலவிளக்காக நான் வாழ வழிகாட்டவா காதோடு தான் நான் பாடுவேன் மலரோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன் பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்...