கண்டுபிடி அவனை கண்டுபிடி
படம்: உன்னுடன் உணர்வு: ஏக்கம் பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், ஹரிணி ஆக்கம்: வைரமுத்து கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி கண்கள் மயங்கவைத்து இளம் கன்னம் வருடியவன் விண்மீன் விழித்திருக்க அவன் நிலவை திருடியவன் கண்டுபிடிஅவளை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டாள் கண்டுபிடி மணக்கும் கூந்தலினால் என் மார்பை வருடியவள் தடயம் ஏதுமின்றி என் இதயம் திருடியவள் கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி முகம் கொஞ்சம் நினைவிருக்கு அவன் முகவரி தெரியவில்லை முதல் முறை திருடியதால் என்னை முழுதாய் திருடவில்லை யோசனை செய்வதற்கும் அந்த பூமுகம் நினைவில் இல்லை வாசலில் மறைந்து விட்டாள் அவள் வாசனை மறையவில்லை திருடி சென்றதை திருப்பி தந்தால் அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன் திருடி சென்றவள் திரும்பி வந்தால் மிச்சம் இருப்பதை மீண்டும் திருட சொல்வேன் உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக நீயென்னை தழுவிக்கொண்டால் என் நெற்றிக்குள் இனிக்குமடி ப...