ஏத்தமையா ஏத்தம் (Yethamaiyaa yetham)

படம்: நினைவே ஒரு சங்கீதம்
பாடியவர்கள்: Malasiya வாசுதேவன், சித்ரா
உணர்வு: பொறுப்பு, கிண்டல்

முந்தி முந்தி விநாயகரே முப்பத்து முக்கோடி தேவர்களே
நீர் கொடுத்த நீரையெல்லாம் நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்
சீராக ஏரோட்டி பார் முழுக்க சோர் கொடுத்து காக்க போறேன்
ஆதரிக்க வேனும்மையா

ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 
ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
எங்கப்பன் உன்பாட்டன் முப்பாட்டன் சொத்து இது
ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்

கோவணத்தில் ஒரு  காசிருந்தா கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டுபடிக்கிற என் மாமா உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா
கோவணத்தில் ஒரு காசிருந்தா கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டுபடிக்கிற என் மாமா உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா
கோவணமுமில்ல கையில் காசுமில்ல பாட்டு வருதே என்னபுள்ள
கோயில் சிலை போல உன்ன கண்டதால் ஏத்தம் கேடுதே கன்னிபுள்ள
சேலைய பார்த்தாலே சொக்கி போகுற என் மாமா
வேலைய பார் மாமா அந்த வெட்டி பேச்சு ஏன் மாமா
காஞ்ச வயலுல தண்ணிய பாய்ச்சனும்
பஞ்சத்த தீக்கனும் பசி தாகம் போக்கணும்

ஏத்தமையா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்

switch ஒன்ன தட்டி உட்டுபுட்டா pump setல தண்ணி கொட்டிபுடும்
மச்சு வேல செய்ய வக்கில்லையே இங்கு வக்கணபேச்சு ஏன்மாமா
switch ஒன்ன தட்டி உட்டுபுட்டா pump setல தண்ணி கொட்டிபுடும்
மச்சு வேல செய்ய வக்கில்லையே இங்கு வக்கணபேச்சு ஏன்மாமா
எந்திரம் வச்சு வேல செய்யலாம் நாமென்ன செய்ய பூமியிலே
மண்ணோட மனுஷன் மனசு இணையும் மகத்துவம் வருமா சொல்லுபுள்ள
மண்ணு விளைஞ்சாலே அது வேனாங்குதா மாமா  
கையில் பொண்ணு நிறைஞ்சாலே அது பொல்லாததா மாமா
விஞ்ஞான காலத்தில் எல்லாமே machine
மனுஷன் மனசு கூட machine ஆகி போச்சு போ புள்ள

ஏத்தமையா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
எங்கப்பன் உன்பாட்டன் முப்பாட்டன் சொத்திருக்கு
ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்

ஏலோலங்கடி ஏத்தம் ரொம்ப ஏத்தம்
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)