புத்தன் ஏசு காந்தி பிறந்தது (Buddhan Yesu Gandhi piranthathu)
படம்: சந்திரோதயம் உணர்வு: எழுச்சி ஆக்கம்: வாலி புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக கங்கை யமுனை காவிரி வைகை ஒடுவதெற்காக நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக கேள்விகுறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக மானம் ஒன்றே பெரிதென்று எண்ணி பிழைக்கும் நமக்காக புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு பகை வந்த போது துணை ஒன்று உண்டு நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு பகை வந்த போது துணை ஒன்று உண்டு இருள் வந்த போது விளக்கொன்று உண்டு எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும் நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும் புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அ...