அச்சம் என்பது மடமையடா (Achcham enbathu madamaiyada)

படம்: மன்னாதி மன்னன்
உணர்வு: எழுச்சி
ஆக்கம்: கவியரசு கண்ணதாசன்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா 
அஞ்சாமை திராவிடர் உடமையடா 

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா

கனகவிஜயரின் முடித்தலை நெரித்து கல்லினை வைத்தான் சேரமகன்
கனகவிஜயரின் முடித்தலை நெரித்து கல்லினை வைத்தான் சேரமகன்
இமயவரம்பினில் மீன் கொடியேற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா

கருவினில் வளரும் மழலையில் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
கருவினில் வளரும் மழலையில் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)