தூங்காதே தம்பி தூங்காதே (Thoongathae thambi thoongathae)

படம்: நாடோடி மன்னன்
உணர்வு: எழுச்சி
ஆக்கம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்: T.M. சௌந்தர்ராஜன்

தூங்காதே தம்பி தூங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனை கண்டு சிரிக்கும்
சக்தி இருந்தால் உனை கண்டு சிரிக்கும்
சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும்


தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே


நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்

நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
சிலர் அல்லும் பகலும் தெருகல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டி கொண்டார்

அல்லும் பகலும் தெருகல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டி கொண்டார்
விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்
விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்
உன் போல் கொறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்


தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே


போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடை தன்னில் தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா


தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)