ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

உணர்வு: தாலாட்டு


ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டிய பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ 
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க  மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்து கொண்டான் தாலேலோ
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்து கொண்டான் தாலேலோ
அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

Comments

  1. Correction:

    //நாகபடம் மீதில் நர்த்தனங்கள் ஆடியதில்
    தாகமெல்லாம் தீர்துகொண்டான் தாலேலோ
    நாகபடம் மீதில் நர்த்தனங்கள் ஆடியதில்
    தாகமெல்லாம் தீர்துகொண்டான் தாலேலோ//


    நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
    தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ
    நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
    தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ

    ReplyDelete
  2. அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியதில்

    அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியபின்

    ReplyDelete
  3. Thank you so much for the lyrics

    ReplyDelete
  4. I love this song very much........................

    ReplyDelete
  5. அந்த மந்திரத்தில் அவர்* உறங்க

    ReplyDelete
  6. அவன் பென்னழ௧ை பார்பதற்௧்கும் போதை முத்தம் கேட்பதற்௧்கும்
    கன்னியரே கோபியரே வாரீரோ
    கன்னியரே கோபியரே வாரீரோ

    ReplyDelete
  7. soooooooooo sweet in listening spb voice in youtube

    ReplyDelete
  8. காதுகளை இனிதாக குளிர்விக்கும் தேன் பாமாலை ..

    ReplyDelete
  9. Excellent tune and lyrics...wonderful song..

    ReplyDelete
  10. Semma lyrics, chance'a illa, wonderful

    ReplyDelete
  11. Indha papttu varigal romba nala irukku.

    ReplyDelete
  12. வார்த்தைகளே இல்லை ஐய்ய்ய்ய்யயொ,,,,,,,,,,,,

    ReplyDelete
  13. Being in heavenly world listening this song. No generation bias for this song. Everybody likes this song unconditionally

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)