எங்கே அந்த வெண்ணிலா (Engae antha vennila)

படம்: வருஷமெல்லாம் வசந்தம் (Varushamellam Vasantham)
பாடல்: எங்கே அந்த வெண்ணிலா
உணர்வு: பாசம்
ஆக்கம்: பழனி பாரதி
பாடியவர்: உன்னி மேனன்


எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனியாக்கினாள் முள்ளை மலராக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா

தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன
நீ தான் எந்தன் ஒளிவிளக்கு
என்றும் நீ தான் எந்தன் ஒளிவிளக்கு

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா

மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வழியும் இல்லையம்மா
நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன
காதல் எனக்கு போதுமம்மா
என் காதல் எனக்கு போதுமம்மா

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனியாக்கினாள் முள்ளை மலராக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா

Comments

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)