பழமுதிர் சோலை எனக்காக தான் (Pazhamuthir solai)

படம்: வருஷம் 16
உணர்வு: வியப்பு, பாசம்

பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்காக தான்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்காக தான்

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூறல்கள் போடுங்கள் பூமியிலே
வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட
ஏரியில் மீன் கோதும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களேன்
ஊர் விட்டு ஊர்சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே

பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்காக தான்

பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிடை போலிங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யுடன் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குழவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட

பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்காக தான்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்


பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்காக தான்

Comments

  1. Why don't you add the lyricist name_kaviyakavignar Vaali

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)