வண்ண நிலவே வண்ண நிலவே (Vanna nilavae vanna nilavae)

படம்: நினைதேன் வந்தாய்
உணர்வு: ஏக்கம்
ஆக்கம்: பழனி பாரதி



வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம்
பூ பூக்குதே என் வாலிபம்

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா

கண்கள் அறியா காற்றை போலே கனவில் என்னை தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தை கலைக்கும் போவே உந்தன் முகவரி என்ன
மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒளியாதே
பெயரைக் கூட சொல்லாமல் என் உயிரை பிழியாதே
நினைவோடு தந்தையெல்லாம் நிஜமாக தருவாயா
உயிருக்கு உயிரை தந்து உறவாட வருவாயா

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா

கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிகொண்டேன் என் வழியென்ன
உன்னை இங்கே தேடித்தேடி தொலைந்து போனேன் என் கதியென்ன
மழைமேகம் நானானால் உன் வாசல் வருவேனே
உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே
கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வர பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம்
பூ பூக்குதே என் வாலிபம்

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)