ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)
படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
உணர்வு: தாய்மை
ஆக்கம்: வைரமுத்து
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில்

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே

வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே
வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே
வானம் முடியும் இடம் நீ தானே
காற்றை போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊரும் உயிரே

எனது சொந்தம் நீ எனது பகையும் நீ
காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ
செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ
செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ
பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ
பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ
மரணம் ஈன்ற ஜனனம் நீ
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
எனது செல்வம் நீ எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவில் கண்ணீர் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவில் கண்ணீர் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே
வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே
வானம் முடியும் இடம் நீ தானே
காற்றை போல் நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊரும் உயிரே
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
Nice
ReplyDeleteSuperb
ReplyDeleteLovely
ReplyDelete