அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே (Appanae appanae pillaiyar)

படம்: அன்னை ஓர் ஆலயம்


அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே
அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே
போடவா தோப்புகரணம் போடவா
நான் பாடவா பாட்டு பாடி ஆடவா
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு

அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே
போடவா தோப்புகரணம் போடவா
நான் பாடவா பாட்டு பாடி ஆடவா

வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்
வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்
வேடிக்கை வித்தை எல்லாம் கத்துக்கிறேன்
வேறென்ன செய்ய வேணும் ஒத்துக்கிறேன்
இஷ்டப்படி சொல்லு நடக்கிறேன்
என்னை நானே விட்டு கொடுக்கிறேன்
சுட்டித்தனம் அத்தனையும் விட்டு விடு ராஜா

அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே
போடவா தோப்புகரணம் போடவா

பார்வதி பெற்றெடுத்த செல்ல பிள்ளை
பாலகன் முருகனும் நல்ல பிள்ளை
நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டி பிள்ளை
தாங்கவில்லை நீ செய்யும் அன்பு தொல்லை
காட்டில் உன்னை கண்டு எடுத்தவன்
காதல் வைத்து உன்னை வளர்த்தவன்
உன்னைப்போல உள்ளம் உள்ள நல்லபிள்ளை ராஜா

அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே
போடவா தோப்புகரணம் போடவா

ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள்
போகட்டும் முன்னம் செய்த தவறுகள்
தாயின்றி இந்த பிள்ளை தவிக்கிறேன்
நீயின்றி உந்தன் அன்னை துடிக்கிறாள்
பெத்த மனம் பித்துபிடித்தது
பிள்ளை நலம் எண்ணி கிடக்குது
அன்னை வசம் உன்னை வைப்பேன் என்னை நம்பு ராஜா

அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே
போடவா தோப்புகரணம் போடவா
நான் பாடவா பாட்டு பாடி ஆடவா
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு
அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே
போடவா தோப்புகரணம் போடவா
நான் பாடவா பாட்டு பாடி ஆடவா

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)