குன்றத்துல கோயிலக்கட்டி (Kundrathula koyilakatti)

படம்: நேசம்
உணர்வு: ஏக்கம்


குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை
உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல என் நெஞ்சுல
ஆனகவுனி கீழாண்ட elephant gate மேலாண்ட
ரவுசு காட்டி குதிச்சாளே என்னான்ட
color blouse குலுங்க சிரிச்சாளே வூட்டாண்ட night வூட்டாண்ட

குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை
உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல

கொண்டித்தோப்பு மாமனுக்கு சுண்டிசொறு ஊதிக்கினா
உச்சிமுடி நட்டுக்கும்டி கிக்குல
உன் நெனப்புல தான் போத கூட நிக்கல அது நிக்கல
ஆச வச்சான் துலுக்காணம் அலுத்துபுட்டா அரக்கோணம்
சேல போல மாத்திக்குவா பொண்ணு
நீ செருப்ப போல தேயிறியே கண்ணு - என் கண்ணு

குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை
உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல

வாழ்க்க ஒரு சீட்டாட்டம் ராணி பாடு கொண்டாட்டம்
ஜெயிச்ச கையில செந்துக்குவா ரம்மி
பாவம் இளிச்சவாயன் ஆம்புள தான் dummy - சுத்த dummy
வெள்ளைக்காரன் கொயுப்படக்கி கோட்ட மேல கொடிய ஏத்தி
சுதந்திரம் தான் பொறந்ததடி nightல
காதல் சொதந்திரம் தான் தவிக்குதடி இருட்டுல - இன்னும் இருட்டுல

குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை
உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல

என்னாடி அலமேலு நீ குடிப்பது single பாலு
எங்கிட்ட உடாத வீண் சவாலு
ஒன்னு வுட்டேன்னுனா எகிறிபோகும் செவுலு - left செவுலு
காதலிச்சது பாவமா காதலுக்கே சாபமா
பச்ச தண்ணி பல்லுல படல பட்டினி
எனக்கு எது வந்தாலும் நீ தான் என் பத்தினி - தர்ம பத்தினி

குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை
உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல

Comments

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)