செந்தூர பூவே இங்கு தேன் (Senthoora Poovae ingu thaen)

படம்: செந்தூர பூவே
உணர்வு: ஏக்கம்

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இரு கரை மீதிலே தன் நிலைமீறியே
ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே ஓ

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைக்கிங்கே களங்கங்கள் இல்லை
வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைக்கிங்கே களங்கங்கள் இல்லை
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பணிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பணிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

அண்ணங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்
அண்ணங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

Comments

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)