தேவதையை கண்டேன் (Devathaiyai Kandaen)

படம்: காதல் கொண்டேன்
பாடல்: தேவதையை கொண்டேன்
உணர்வு: ஏக்கம்
ஆக்கம்: நா. முத்துக்குமார்
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்தர்

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்
ஒரு வண்ணத்துபூச்சி எந்தன் வழி தேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது
தீக்குள்ளே விரல் வைத்தேன்
தனி தீவில் கடை வைத்தேன்
மணல் வீடு கட்டி வைத்தேன்

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவாதி

விழியோரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராதே
எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவு உடைந்து போகுதே

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும் போகும்
சோழியாய் எனை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கொண்டேன் கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம்கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது என்ன ஆவது
என் வாழ்வு தாழ்வும் உன்னை சேர்வது

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்
ஒரு வண்ணத்துபூச்சி எந்தன் வழி தேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது
தீக்குள்ளே விரல் வைத்தேன்
தனி தீவில் கடை வைத்தேன்
மணல் வீடு கட்டி வைத்தேன்

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)