வீர சிவாஜி வசனம் (Sivaji Ganesan as Chathrapathi Shivaji)
படம்: ராமன் எத்தனை ராமனடி நாடகம்: வீர சிவாஜி அரசே! தங்களின் முடிசூட்டு விழாவிற்கு ஒரு தடைவிழுந்திருக்கிறது ஏன்! மகுடம் தயாராகவில்லையா இல்லை! பிறகு! காரணம் தாங்கள் தாழ்ந்த ஜாதியாம் அரசியலையே அறிய மாட்டிர்களாம் அதனால் முடிசூட்டி கொள்ள முடியாதாம் தாழ்ந்த ஜாதி? அரசியலை அறியாதவன்? ம்ம்ஹு யார்? தானும் நாடும் ஒன்றென கண்டு தன்னையே தந்த மன்னன் சிவாஜி! தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்து மகுடம் தாங்க முடியாதா தார்தாரியர் தந்த புரவியில் அமர்ந்து ஆற்றெழுந்த சிவாஜியை கண்டு நாட்டுக்குடைய நல்லவனென்றும் போர் வாட்டு முழக்கும் மன்னவனென்றும் ஆரத்தி எடுத்த மக்களெங்கே ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும் அதன் சாரத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே உரைத்து வாளெடுத்த ஒவ்வொரு கணமும் மராட்டியம் மராட்டியம் என்றே முழங்கி இறை அடிக்க துடித்த வேங்கை போல் எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி கறைபடியாத என் அன்னை நாட்டை காப்பேன் காப்பேன் என சூளுரைத்து இந்த நாடு என் சொந்த நாடு இந்த மக்கள் என் சொந்த மக்கள் உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன் பகைவரை தேடினேன் வாள...