சந்தன தென்றலை (Santhana thendralai)

படம்: கண்டுகொன்டேன் கண்டுகொன்டேன்
உணர்வு: ஏக்கம்
ஆக்கம்: வைரமுத்து

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லையென்ற சொல்லை தங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப்போகிறாய்

சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா..
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா..
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே

இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட கயிற் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்னே
இல்லை நின்று கொல்லடி கண்னே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழி விளிம்பில்
என்னை துரத்தாதே உயிர் கரையேறாதே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லையென்ற சொல்லை தங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப்போகிறாய்
என்ன சொல்லப்போகிறாய்

சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்பும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உண் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன என்ன புரியாதா
இது வாழ்வா சாவா

என்ன சொல்லப்போகிறாய்
என்ன சொல்லப்போகிறாய்

என்ன சொல்லப்போகிறாய்
என்ன சொல்லப்போகிறாய் நியாயமா நியாயமா
என்ன சொல்லப்போகிறாய் மௌனமா மௌனமா
என்ன சொல்லப்போகிறாய்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)