ஒன்றே குலமென்று பாடுவோம் (Onre Kulamendru paaduvom)

படம்: பல்லாண்டு வாழ்க
உணர்வு: எழுச்சி
ஆக்கம்: புலமைபித்தன்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்


ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

கடவுளிலே கருணை தன்னை காணலாம்
அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்

கடவுளிலே கருணை தன்னை காணலாம்
அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் காட்சியாம்



ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி

பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழியொன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடைபோடுவோம்


ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்


இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்


ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

Comments

  1. What is the raga of this song? Ifeel it is Bilaskani thody. Correct?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)