தினம் தினம் உன் முகம் (Dhinam dhinam un mugam)
படம்: தங்கைகோர் கீதம் உணர்வு: ஏக்கம் தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல் கட்டம் மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன் மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன் மைவிழி மயக்குதே disco disco disco disco கவிதைகள் வரைந்தேன் அதிலெந்தன் ரசனையை கண்டாயோ கடிதங்கள் போட்டேன் இதயத்தை பதிலாக்கி தருவாயோ முல்லை உன்னை அடைய முயற்சியை தொடர்வேன் மௌனமாகி போனால் மனதினில் அழுவேன் பாவையின் பார்வையே அமுதமாம் தக தக தக தக தம் தேவியின் ஜாடையே தென்றலாம் தக தக தக தக தம் தவம் கூட செய்வேன் தேவதையே நீ கண் திறந்து பாராயோ உயிரையும் விடுவேன் காப்பாற்ற மனமின்றி போவாயோ திறியற்று கருகும் தீபமென ஆனேன் எண்ணையென நினைத்து உன்னை தானே அழைத்தேன் நிலவே நீ வா நீ வா தக தக தக தக தம் நினைவே நீ தான் நீ தான் தக தக தக தக தம் தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல் கட்டம்