பேசக்கூடாது (Paesa koodathu)

படம்:  அடுத்த வாரிசு

பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே
ஆசை கூடாது மணமாலை தந்து
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே
ஆசை கூடாது

பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் என் கவிதை நீ
பாடும் ராகம் நீ என் நாணம் நீ என் உயிரும் நீ
காலம் யாவும் நானுன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ
ஆலிலாடும் மேனியெங்கும் கொஞ்சும் செல்வம் நீ
இடையோடு கனியாட தடை போட்டால் நியாயமா
உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேலும் ஏனிந்த எல்லை

ஆசை கூடாது மணமாலை தந்து
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே
பேசக்கூடாது

காலை பணியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ
உஞ்சலாடும் பருவும் உண்டு உரிமை தரவேண்டும்
நூலிலாடும் இடையும் உண்டு நாளும் வரவேண்டும்
பலகாலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசை கூடாது மணமாலை தந்து
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே
பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)