உன்னை நான் பார்த்தது (Unnai naan paarthathu)

படம்:  பட்டிகாட்டு ராஜா
உணர்வு: ஏக்கம், உற்சாகம்

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்
நான் உனக்காகவே பாடுவேன் கண் உறங்காமலே பாடுவேன்

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்

அன்று ஒரு பாதி முகம் தானே கண்டேன்
இன்று மறு பாதி எதிர்பார்த்து நின்றேன்
அன்று ஒரு பாதி முகம் தானே கண்டேன்
இன்று மறு பாதி எதிர்பார்த்து நின்றேன்
கைவளையோசை கடல் பொங்கும் அலையோசையோ
என செவியார நான் கேட்க வரவில்லையோ

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்

கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னி தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடிமீது குடியேறி முத்தாடவா

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்

எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னை தொடராமல் நானின்று வந்தேன்
எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னை தொடராமல் நானின்று வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்

Comments

  1. After a long time, seeing a lyrics with zero errors. Thanks.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)