மலர்ந்தும் மலராத (Malarnthum malaraatha)

படம்:  பாசமலர்
உணர்வு: பாசம், தாலாட்டு, வேதனை

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழிவண்ணமே
வந்து விடிந்து விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

யானை படைகொண்டு சேனை பலவென்று
ஆளப்பிறந்தாயடா புவி ஆளப்பிறந்தாயடா
அத்தை மகளை மனம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப்பிறந்தாயடா வாழப்பிறந்தாயடா
அத்தை மகளை மனம் கொண்டு இளமை வழி கண்டு
அத்தை மகளை மனம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப்பிறந்தாயடா வாழப்பிறந்தாயடா

தங்க கடியாரம் வைர மணியாரம் தந்து விலை பேசுவார்
பொருள் தந்து மனம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணிபோல மணியின் நிழல்போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை மறக்க முடியாதடா

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)