சந்தன காற்றே செந்தமிழ் (Santhana Kaatrae)

படம்:  தனிகாட்டு ராஜா

சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷ பாட்டே வா வா
சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷ பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை  நீங்காத ஆசை

சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷ பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை  நீங்காத ஆசை

நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே
நீங்காமல் தோள்களில் சாயும் ரதியே
பூலோகம் தெய்வீகம்
பூலோகம் மறைய மறைய
தெய்வீகம் தெளிய தெளிய வைபோகம் தான்

பூபாலன் சாய்வதும் கோதை மடியில்
பூபாளம் பாய்வதும் பூவை மனதில்
பூங்காற்றும் சூடேற்றும்
பூங்காற்றும் தவள தவள
சூடேற்றும் தழுவ தழுவ ஏகாந்தம் தான்

சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷ பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை  நீங்காத ஆசை
சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷ பாட்டே வா வா

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)