ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (Rosapoo chinna rosapoo)

படம்: சூரியவம்சம் (Suriyavamsam)
பாடல்: ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உணர்வு: பாசம்


ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேர சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேர சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
எம் பாட்டு மட்டும் துணையாக
காத்தில் ஆடும் தனியாக
எம் பாட்டு மட்டும் துணையாக

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேர சொல்லும் ரோசாப்பூ
 மனசெல்லாம் பந்தலிட்டு மல்லி கொடியாக உன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி உன்ன கொலு வச்சு கொண்டாடினேன்
மழை பேஞ்சா தானே மண் வாசம்
உன்ன நெனச்சாலே பூ வாசம் தான்
பாத மேல பூத்திருப்பேன்
கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேர சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
 கண்ணாடி பாக்கையில அங்க முன்னாடி உன் முகம் தான்
கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசா என் மனம் தான்
நிழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
மலைமேல் விளக்கா ஏத்தி வைப்பேன்
உன்ன படம் போல் மனசில் மாட்டி வைப்பேன்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேர சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேர சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
எம் பாட்டு மட்டும் துணையாக
 ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேர சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
எம் பாட்டு மட்டும் துணையாக

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)