மின்னல் ஒரு கோடி (Minnal oru kodi)

படம்: V.I.P
உணர்வு: ஏக்கம், தவிப்பு

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே


மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ..
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீயென் காதல் தேவதையே

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ

குளிரும் பணியும் எனை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இங்கு சரியோ பிரிவே
நீராகினால் நான் மழையாகிறேன்
நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்
என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்
ஓ காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை உன் வாழ்க்கையோ

மழையில் நனையும்  பனிமலரை போலே
என் மனமே நனைந்தேன் உன் நினைவில் நானும் ஓ
உலகை தழுவும் நல்லிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாகினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்


மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே ஓ..
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே ஆ..
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீயென் காதல் தேவதையே

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)