மன்றம் வந்த தென்றலுக்கு (Mandram vantha thendralukku)

படம்: மௌன ராகம்
உணர்வு: வேதனை, தவிப்பு
ஆக்கம்: வாலி

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

மேடையை போலே வாழ்க்கையென்ன
நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
ஓடையை போலே உறவுமல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
என்னோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும் 
என்னோடு நீ வந்தால் என்ன வா

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்தபாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கை தான் என்ன சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

Comments

  1. I wanna know how did u create this simple and nice app..

    ReplyDelete
    Replies
    1. ம். நல்லா இருக்குல்ல?!

      Delete
  2. Who created this web??

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)