மேற்கே விதைத்த சூரியனே (Merkae vithatha suriyanae)

படம்: Citizen
உணர்வு: ரௌத்திரம்

மேற்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்
இடர் நீங்கவே அந்த இருள் போகவே
கையில் ஒளிசாட்டை எடுத்தாலென்ன
விஸ்வரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள் விழுந்தாலென்ன
மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளாய் எடுத்து
இன்னல் தீர தீர போராட்டம் நடத்து
(மேற்கே விதைத்த சூரியனே உன்னை.....)

கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு கல்லறைகள் அல்ல
சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல
ரெக்க்ககட்டி ரெக்க்ககட்டி வாடா வானம் உண்டு வெல்ல
வண்ண சிறகின் முன்னே வானம் பெரிதல்ல
இதயம் துணிந்து எழுந்த பின்னாலே
இமயமலை உந்தன் இடுப்புக்கு கீழே
நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும்
விரல்களில் எரிமலை ஒன்று வெடிக்கட்டும்
முட்டுங்கள் திறக்கும் என்று புது BIBLE கேட்கட்டும்

(மேற்கே விதைத்த சூரியனே உன்னை.....)

சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம் தீ வளர்த்து பார்போம்
விடியல் வரும் முன்னே இருள் எரித்து கொல்வோம்
குட்டுப்பட்ட குட்டுப்பட்ட கூட்டம் குனிந்த கதை போதும்
பொறுமை மீறும் போது புழுவும் புலியாகும்
தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா
சிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா
புயத்திலே வைரத்தை ஒன்றாய் திரட்டுவோம்
நிஜத்திலே பூமியை முட்டி புரட்டுவோம்
வறுமைக்கு பிறந்த கூட்டம் வையத்தை ஆளட்டும்

(மேற்கே விதைத்த சூரியனே உன்னை.....)

Comments

  1. நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும்..
    விரல்களில் எரிமலை ஒன்று வெடிக்கட்டும்..
    நன்றிகள் பல..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)