சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால் (Sithathinaal konda pithathinaal)
படம்: Duet
உணர்வு: ஏக்கம்
சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
எனது ரத்தத்தினால் காதல் யுத்தத்தினால்
கவிதை எழுதிவைத்தேன் தோழி
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி
கண் பார்த்ததும் கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும் தள்ளி பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றும் சொன்னதில்லை தமிழுக்கு பஞ்சம்
கண்டிப்பதால் என்னை நிந்திப்பதால்
நெஞ்சை தண்டிப்பதால் தலையை துண்டிப்பதால்
தீராது என் காதல் என்பேன்
நீ தீயள்ளி தின்னச்சொல் தின்பேன்
உண்டென்று சொல் இல்லை
நில்லென்று சொல் இல்லை
வாவென்று சொல் இல்லை
போவென்று கொல்
இம்மென்றால் உள்ளதடி சொர்க்கம்
நீயில்லை என்றால் இடுகாடு பக்கம்
Great
ReplyDeleteசெம்ம
ReplyDeleteSuper
ReplyDelete