சிட்டு சிட்டு குருவிக்கு (Chittu chittu kuruvikku)
படம்: உள்ள்ளத்தை அள்ளித்தா
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா
மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன் நீங்க மொச பிடிச்ச நாய் தான் மாப்ளேய்
நன்றி எல்லாம் நாயப்போல தான் ஆனா வாலு மட்டும் இல்ல மாம்மோய்
தொட்டவுடன் சினுங்கிடும் செடி ஒன்னு இருக்கு
தொட்டவுடன் மொட்டுவிடும் கொடி என்ன சொல்லவா கொடி என்ன சொல்லவா
மின்னலுக்கு வெட்கம் வர மண்ணில் வந்து நடக்கும்
கன்னிமகள் சின்ன இடை கொடி என்று சொல்லவா கொடி என்று சொல்லவா
சிக்கி முக்கி கல்லப்போல பத்திகிச்சு நெருப்பு நெஞ்சுக்குள்ள ரெண்டு மடங்கு துடிப்பு
நான் பச்சை வாழையா முத்தம் சிந்தி என்னை அழைக்கும் நீ சாரல் மழையா
சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா
தங்கமான குணத்தக்கண்டு ஒரு தங்கமான பொண்ணு புடிச்சேன் மாப்ளேய்
தண்ணிக்குள்ள நெய்யேடுப்பேன் நான் அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாம்மோய்
வண்ணமதி வட்டமதி வானத்திலே இருக்கும் பூமி எல்லாம் தேடும் மதி என்னவென்று சொல்லவா என்னவென்று சொல்லவா
நீ என்னக்கு தந்த மதி உண் மடியில் கிடைக்கும் நிம்மதி தான் என்று உந்தன் காதில் வந்து சொல்லவா காதில் வந்து சொல்லவா
உள்ளம் எங்கும் உண் பெயரை சொல்லி சொல்லி துடிக்கும் உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும்
பனி சிந்தும் பூவனம் போர்வை போல என்னை மூடும் ஒரு சேலை மேகம்
(சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு....)
Comments
Post a Comment