கவிதைக்கு பொருள் தந்த (Kavithaikku porul thantha)
படம்: Duet
உணர்வு: ஏக்கம்
கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா
என்னை பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா
எனை சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா
பருவத்தின் தோட்டத்தில் முதற்பூவும் நீயா
என் பாலைவனம் காண்கின்ற முதர்மழையும் நீயா
இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான்
என் இருகண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்
வார்த்தைக்குள் உண்டாடும் உள்ளர்த்தம் நீதான்
என் வாத்தியத்தின் இசையாக உயிர் மூச்சும் நீதான்
தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்
என் பக்கத்தில் அக்கினியாய் சுட்டவளும் நீதான்
காதலுக்கு கண்திறந்து வைத்தவளும் நீதான்
நான் காதலித்தால் கண்மூடி கொண்டவளும் நீதான்
Super
ReplyDeleteஅருமை நண்பரே. வைரமுத்துவின் வைர வரிகள்
ReplyDelete