மனிதா மனிதா (Manitha manitha)

படம்: கண் சிவந்தால் மண் சிவக்கும்
உணர்வு: ரௌத்திரம்

மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்

மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா
பசியால் பல ஏழைகள் சாவதென்பது தேசியமானதடா
இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியமானதடா
அட சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா

(மனிதா மனிதா இனி.......)
மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

ஒளி வீசுக சூரியனே யுகம் மாறுது வாலிபனே
ஒரு தோல்வியிலா புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்து விடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும்
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டு விடும்

(மனிதா மனிதா இனி.......)

Comments

  1. அருமையான பாடல்

    ReplyDelete
  2. Thanks for the lyrics. Some corrections to update. Only lines that needs correction is given
    சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா
    இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியமானதடா
    அட சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)