Oh uncle oh uncle oh
படம்: மின்சார கண்ணா
உணர்வு: தன்னம்பிக்கை
உணர்வு: தன்னம்பிக்கை
Oh uncle oh uncle oh uncle aunty oh aunty oh aunty oh aunty uncle
Oh uncle aunty நான் உங்கள் வீட்டு பிள்ளையே
எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே
Oh uncle aunty நான் உங்கள் வீட்டு பிள்ளையே
எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே
மலரின் உழைப்புகள் கனியாகும்
மழையின் உழைப்புகள் நதியாகும்
மூங்கில் உழைப்புகள் குழலாகும்
மனிதன் உழைப்புகள் பணமாகும்
Oh uncle oh uncle.....
மதங்கள் சண்டையிடும் உலகத்தை திருத்தி அமைதி சொல்ல வேண்டும்
மலர்கள் எடுத்து நாம் ஆயுதம் அழித்து அன்பை சொல்ல வேண்டும்
அறிவாலே உந்தன் அறிவாலே பூமி உன்வசம் ஆக்கிவிடலாம்
முடியாது என்று கிடையாது நீ முயன்றால் வெற்றி கொள்ளலாம்
மண்ணும் விண்ணும் தூரம் இல்லை தொட்டுக்கொள்ள பாலம் உண்டு
தண்ணீரிலும் வானம் தோன்றுமே
Oh uncle oh uncle.....
நாளைக்கு என்னும் சொல்லை நீ தள்ளி போடு இன்றைக்கே முடித்துவிடு
விளக்கின் அடியிலும் இருட்டுகள் இருக்கு வெளிச்சம் தேடி எடு
அருவியிடம் மலையருவிடம் நாம் பாடங்களை கற்றுகொள்ளலாம்
குருவிகளை சிட்டுக்குருவிகளை நாம் மாணவராய் சேர்த்து கொள்ளலாம்
மண்ணை முத்தமிட்டதால் கன்னங்கள் சிவந்ததோ carrotக்கும் வெட்கம் வந்ததோ
Oh uncle oh uncle.....
had not heard this. enna padam ithu? good one.
ReplyDelete