Posts

Showing posts from June, 2012

உங்க பொன்னான (Unga ponaana)

படம்: காதலிக்க நேரமில்லை உணர்வு: கிண்டல் உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா சேலாட்டம் கண்ணும் நூலாட்டும் இடையும் திண்டாட்ட படலாமா ஹோய் தாலாட்டும் பெண்ணின் பூவாட்டம் கைகள் காரோட்ட வரலாமா கட்டான மேனி கலங்கிட குலுங்கிட வேலை செய்யலாமா இது நாகரீகமா போற வேகமா நானும் வரலாமா ஒ ஹோய் உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா  உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா ஆனான படிப்பு நீ படித்தாலும் அதுக்கது துணை வேணும் கோடானகோடி பணமிருந்தாலும் கும்பிட்டு விழ வேணும் ஆனான படிப்பு நீ படித்தாலும் அதுக்கது துணை வேணும் கோடானகோடி பணமிருந்தாலும் கும்பிட்டு விழ வேணும் கொஞ்சாத கிளியும் கூவாத குயிலும் உலகினில் கிடையாது இந்த கோபம் மாறுமா போக முடியுமா நான் தான் விடுவேனா ஒ ஹோய் உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா கண்ணாலே வார்த்தை சொன்னாலும் போதும் முன்னாலே வருவேனே கல்யாண தேரில் உல்...

உன்னை காணாத (Unnai kaanatha)

Image
படம்: இதய கமலம் உணர்வு: பாசம் உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல இங்கு நீயொரு பாதி நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி இங்கு நீயொரு பாதி நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலுமில்லை ஒரு கோவிலில்லாமல் தீபமுமில்லை ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலுமில்லை ஒரு கோவிலில்லாமல் தீபமுமில்லை நீயெந்தன் கோவில் நான் அங்கு தீபம் தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல என்மேனியில் உன்னை பிள்ளையை போலே நான் வாரி அணைப்பேன் ஆசையினாலே என்மேனியில் உன்னை பிள்ளையை போலே நான் வாரி அண...

வாராயோ வெண்ணிலவே (Vaarayo vennilavae)

படம்: மிஸ்ஸியம்மா உணர்வு: விரோதம் வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலவே அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதிநான் சதிபதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலவே வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதிநான் வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதிநான் நம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளிவேஷம் வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலவே தன்பிடிவாதம் விடாது என்மனம் போல் நடக்காது தன்பிடிவாதம் விடாது என்மனம் போல் நடக்காது நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலவே அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலவே

விண்ணோடும் முகிலோடும் (Vinnodum Mugilodum)

படம்: புதையல் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே தேடாத செல்வ சுகம் தானாக  வந்ததுபோல் ஓடோடி வந்த சொர்கபோகமே ஓடோடி வந்த சொர்கபோகமே காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினிலே ஆனந்த போதையூட்டும் யோகமே வாழ்விலே விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே சந்தோசம் காண உள்ளம் நாடுதே சந்தோசம் காண உள்ளம் நாடுதே மங்காத தங்கமிது மாறாத வைரமிது ஒன்றாகி இன்பகீதம் பாடுதே வாழ்விலே விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசைய...

உலவும் தென்றல் காற்றினிலே (Ulavum thendral kaatrinilae)

படம்: மந்திரிகுமாரி உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம் போடுதே அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம் போடுதே உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே இதயம் அந்த மலைக்குயேது அன்பை காட்டவே இதயம் அந்த மலைக்குயேது அன்பை காட்டவே தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம் தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம் களங்கம் அதிலும் காணுவாய் களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார் குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே உலக வாழ்க்கை ஆற்றினிலே காதலெனும் தோனிதனில் ஊர்ந்து செல்லுவோம் உலக வாழ்க்கை ஆற்றினிலே காதலெனும் தோனிதனில் ஊர்ந்து செல்லுவோம்

இசைத்தமிழ் நீ செய்த (Isaithamizh nee seitha)

படம்: திருவிளையாடல் இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இறைவா இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே  உயிர் மயக்கம் நாத பாட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை தாய்க்கொரு பழிநேர்ந்தால் மகர்க்கில்லையோ அன்னை தமிழுக்கு...

பாத்தா பசுமரம் (Paatha pasumaram)

படம்: திருவிளையாடல் பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா  ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா வட்டமிடும் காளையை பார் வாட்டசாட்டமா வட்டமிடும் காளையை பார் வாட்டசாட்டமா கூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா கூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா  ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு இவரு போன வருஷம் மழைய நம்பி வெதவெதச்சாரு பொன்னும் பொருளு...

ஓராயிரம் பார்வையிலே (Orayiram paarvayilae)

படம்: வல்லவனுக்கு வல்லவன் உணர்வு: தவிப்பு நூறுமுறை பிறந்தாலும்  நூறுமுறை இறந்தாலும் உனைபிரிந்து வெகு தூரம் நான்  ஒருநாளும் போவதில்லை உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும் ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன்காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் இந்த மானிட காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும் அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும் நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன்காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் இந்த காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களை தழுவுகின்றேன் இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆடையில் ஆடுகின்றேன் நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன்காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

அதோ அந்த பறவை போல (Atho antha paravai pola)

படம்: ஆயிரத்தில் ஒருவன் உணர்வு: எழுச்சி ஆக்கம்: கண்ணதாசன் அதோ அந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம் அதோ அந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம் காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே கடல் நீரும் அடிமை என்று  சுடுவதில்லையே காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம் அதோ அந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம் தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே  பேசவில்லையே  வாழும் போது பசியில்லாமல் வாழவில்லையே போகும் போது வேறு பாதை போகவில்லையே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம் அதோ அந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ...

ஓடும் மேகங்களே (Odum maegangalae)

படம்: ஆயிரத்தில் ஒருவன் உணர்வு: தவிப்பு ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு இதில் நான் அந்த மான்  நெஞ்சை நாடுவதெங்கே கூறு ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு பாதியிலே வெகு தூரம் பயணம் போகின்ற நேரம் காதலை யார் மனம் தேடும் இதில் நான் அந்த மான்  நெஞ்சை நாடுவதெங்கே கூறு ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தா...

கடவுள் ஒரு நாள் உலகை (Kadavul oru naal ulagai)

படம்: சாந்தி நிலையம் ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான் ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான் படைத்தவனோ உடனே சிரித்து விட்டான் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது காசும் பணமும் ஆசையும் யார் தந்தது கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது காசும் பணமும் ஆசையும் யார் தந்தது எல்லையில்லா நேரம் நிலமும் நான் தந்தது எங்கும் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது இறைவனுக்கே இது புரியவில்லை மனிதரின் கொள்கை தெரியவில்லை ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான் ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான் படைத்தவனோ உடனே சிரித்து விட்டான் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம் பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்...

பூமியில் இருப்பதும் (Boomiyil irupathum)

படம்: சாந்தி நிலையம் உணர்வு: தன்னம்பிக்கை ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே இருக்கும் இடம் எதுவோ டாச்சூ டாச்சூ நினைக்கும் இடம் பெரிது டாச்சூ டாச்சூ போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே நெஞ்சினில் துணிவிருந்தால் டாச்சூ டாச்சூ நிலவுக்கும் போய்வரலாம் டாச்சூ டாச்சூ பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே இருக்கும் இடம் எதுவோ நினைக்கும் இடம் பெரிது போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே நெஞ்சினில் துணிவிருந்தால் டாச்சூ டாச்சூ நிலவுக்கும் போய்வரலாம் டாச்சூ டாச்சூ டாச்சூ  டாச்சூ  உலகம் போகின்ற வேகம் உருவமும் இனிமேல் மாறும் உலகம் போகின்ற வேகம் உருவமும் இனிமேல் மாறும் நடக்கும் கதைகளை பார்த்தால் நமக்கே சிறகுகள் முளைக்கும் ரஷ்சியர்கள் அனுப்பிய கூடு ராக்கெட் என்பது பேரு சிஷ்யர்கள் அனுப்பிய கூடு தெரியுது வானத்தில் பாரு பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே இருக்கும் இடம் எதுவோ டாச்சூ டாச்சூ நினைக்கும் இடம் பெரிது டாச்சூ டா...

செந்தமிழ் தேன்மொழியாள் (Senthamizh thenmozhiyaal)

படம்: மாலையிட்ட மங்கை சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள் நிற்குமோ நெஞ்சம் நிலைக்குமோ ஆவி மனம் பெறுமோ வாழ்வே செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ அவள் செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் கண்களில் நீளம் விழைத்தவளோ அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ கண்களில் நீளம் விழைத்தவளோ அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்...

உள்ளத்திலே உரம் வேணுமடா (Ullathilae uram venumadaa)

படம்: விஜயபுரி வீரன் உணர்வு: எழுச்சி உள்ளத்திலே உரம் வேணுமடா உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா உள்ளத்திலே உரம் வேணுமடா உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா வல்லவன் போலே பேசக்கூடாது வானரம் போலே சீறக்கூடாது வல்லவன் போலே பேசக்கூடாது வானரம் போலே சீறக்கூடாது வாழத்தெரியாமலே கோழைத்தனமாகவே வாலிபத்தை விட்டு விட கூடாது மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் ஏட்டு சுரைக்காயெல்லாம் மூட்டை கட்டியாகணும் நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும் ஏட்டு சுரைக்காயெல்லாம் மூட்டை கட்டியாகணும் நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும் மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே உள்ளத்திலே உரம் வேணுமடா உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா உள்ளத்தி...

அழகிய மிதிலை நகரினிலே (Azhagiya mithilai nagarinilae)

படம்: அன்னை அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் காவிய கண்ணகி இதயத்திலே காவிய கண்ணகி இதயத்திலே கனிந்தவர் யார் இளம் பருவத்திலே கோவலன் என்பதை ஊர் அறியும் கோவலன் என்பதை ஊர் அறியும் சிறு குழந்தைகளும் அவன் பேர் அறியும் அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் பருவத்து பெண்கள் தனித்திருந்தால் பருவத்து பெண்கள் தனித்திருந்தால் பார்ப்பவர் மனதில் என்ன வரும் இளையவர் என்றால் ஆசை வரும் இளையவர் என்றால் ஆசை வரும் முதியவர் என்றால் பாசம் வரும் முதியவர் என்றால் பாசம் வரும் ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால் உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால் இருவர் என்பது மாறி விடும் இருவர் என்பது மாறி விடும் இரண்டும் ஒன்றாய் கலந்து விடும் அழகிய ம...

எத்தனை காலம் தான் (Ethanai kaalam thaan)

படம்: மலைக்கள்ளன் உணர்வு: எழுச்சி எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இன்னும்  எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே  சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி பாமர மக்களை வலையினில் மாட்டி எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே  சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் கல்வி தெரியாத பேர்களை இல்லாமல் செய்வோம் கல்வி தெரியாத பேர்களை இல்லாமல் செய்வோம் கருத்தாக பல தொழில் பயிலுவோம் கருத்தாக பல தொழில் பயிலுவோம் ஊரில் கஞ்சிகில்லை என்ற சொல்லினை போக்குவோம் ஊரில் கஞ்சிகில்லை என்ற சொல்லினை போக்குவோம் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே ஆளுக்கொரு வீடு கட்டுவோம் ஆளுக்கொரு வீடு கட்டுவோம் அதில் ஆய கலைகளை சீராக பயில்...

ஆசையே அலை போலே (Aasaiyae alai polae)

Image
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் உணர்வு: அனுபவம் ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே பருவமென்னும் காத்திலே பறக்கும் காதல் தேரிலே பருவமென்னும் காத்திலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார் நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார் ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன் வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன் இளமை மீண்டும் வருமா மணம்  பெறுமா முதுமையே சுகமா காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார் ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார் ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன்...

மனப்பார மாடு கட்டு (Mannapara maadu kattu)

படம்: மக்களை பெற்ற மகராசி உணர்வு: பொறுப்பு பொன்னு  விளையுற பூமியடா விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்வோமடா உண்மையா உழைக்கிற நமக்கு எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா மனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி  வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு மனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி  மனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி  வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு ஆத்தூரு கிச்சடி சம்பா  ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வெதவெதச்சு  ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வெதவெதச்சு  நாத்த பறிச்சு நட்டு போடு சின்னக்கண்ணு தண்ணிய ஏத்த புடிச்சு ஏறச்சு போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சு நட்டு போடு சின்னக்கண்ணு தண்ணிய ஏத்த புடிச்சு ஏறச்சு போடு செல்லக்கண்ணு கருத நல்ல விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு கருத நல்ல விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லக்கண்ணு எ...

நான் உங்கள் வீட்டு பிள்ளை (Naan ungal veetu pillai)

படம்: புதிய பூமி உணர்வு: எழுச்சி ஆக்கம்: பூவை செங்குட்டுவன் நான் உங்கள் வீட்டு பிள்ளை  இது ஊரறிந்த உண்மை நான் உங்கள் வீட்டு பிள்ளை  இது ஊரறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை நான் உங்கள் வீட்டு பிள்ளை  இது ஊரறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை காலம் தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை காலம் தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை இதயம் என்பது ரோஜாவானால் நினைவை நறுமணம் ஆகும் இதயம் என்பது ரோஜாவானால் நினைவை நறுமணம் ஆகும் எங்கே இதயம் வாழும் அன்பே என்னை ஆளும் நான் உங்கள் வீட்டு பிள்ளை  இது ஊரறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை கோவிலென்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே உள்ளமென்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே கோவிலென்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே உள்ளமென்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே பிறந்த நாடே சிறந்த கோவ...