பூமியில் இருப்பதும் (Boomiyil irupathum)

படம்: சாந்தி நிலையம்
உணர்வு: தன்னம்பிக்கை
ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன்

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ டாச்சூ டாச்சூ
நினைக்கும் இடம் பெரிது டாச்சூ டாச்சூ
போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் டாச்சூ டாச்சூ
நிலவுக்கும் போய்வரலாம் டாச்சூ டாச்சூ

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ
நினைக்கும் இடம் பெரிது
போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் டாச்சூ டாச்சூ
நிலவுக்கும் போய்வரலாம் டாச்சூ டாச்சூ
டாச்சூ டாச்சூ 

உலகம் போகின்ற வேகம் உருவமும் இனிமேல் மாறும்
உலகம் போகின்ற வேகம் உருவமும் இனிமேல் மாறும்
நடக்கும் கதைகளை பார்த்தால் நமக்கே சிறகுகள் முளைக்கும்
ரஷ்சியர்கள் அனுப்பிய கூடு ராக்கெட் என்பது பேரு
சிஷ்யர்கள் அனுப்பிய கூடு தெரியுது வானத்தில் பாரு

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ டாச்சூ டாச்சூ
நினைக்கும் இடம் பெரிது டாச்சூ டாச்சூ
போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் டாச்சூ டாச்சூ
நிலவுக்கும் போய்வரலாம் டாச்சூ டாச்சூ
டாச்சூ டாச்சூ

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)