செந்தமிழ் தேன்மொழியாள் (Senthamizh thenmozhiyaal)

படம்: மாலையிட்ட மங்கை

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ நெஞ்சம் நிலைக்குமோ ஆவி மனம் பெறுமோ வாழ்வே

செந்தமிழ் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்

செந்தமிழ் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்

காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ
காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ

அவள் செந்தமிழ் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்

கண்களில் நீளம் விழைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
கண்களில் நீளம் விழைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ

அவள் செந்தமிழ் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்

மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
விண்மீன்களை மலராய் அணிந்தவளோ
மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
விண்மீன்களை மலராய் அணிந்தவளோ
மோகத்திலே இந்த உலகம் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ
மோகத்திலே இந்த உலகம் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ

அவள் செந்தமிழ் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)