உலவும் தென்றல் காற்றினிலே (Ulavum thendral kaatrinilae)

படம்: மந்திரிகுமாரி

உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே

அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம் போடுதே

உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே

இதயம் அந்த மலைக்குயேது அன்பை காட்டவே
இதயம் அந்த மலைக்குயேது அன்பை காட்டவே

தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம்

களங்கம் அதிலும் காணுவாய்
களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார்

குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ

உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே

உலக வாழ்க்கை ஆற்றினிலே காதலெனும் தோனிதனில் ஊர்ந்து செல்லுவோம்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)