நான் உங்கள் வீட்டு பிள்ளை (Naan ungal veetu pillai)
படம்: புதிய பூமி
உணர்வு: எழுச்சி
ஆக்கம்: பூவை செங்குட்டுவன்
நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை

காலம் தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை

இதயம் என்பது ரோஜாவானால் நினைவை நறுமணம் ஆகும்

எங்கே இதயம் வாழும் அன்பே என்னை ஆளும்
நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை
கோவிலென்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே
உள்ளமென்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே

பிறந்த நாடே சிறந்த கோவில் பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால் கோபுரமாகும் கொள்கை
நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை
உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு
உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் நிச்சயம் உலகில் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு
எதுவந்தாலும் ஏற்றுக்கொண்டால் துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி
நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை
Excellent sing and tune
ReplyDeleteஇந்த பாடலை எழுதியவர் கவிஞர் பூவை. செங்குட்டுவன்.

ReplyDeleteபூவை.செங்குட்டுவன் என்பதே சரி.
Deleteசூப்பர்.... காலத்தால் அழியாத பாடல்
ReplyDeleteஉனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் நிச்சயம் உலகில் உண்டு
ReplyDeleteThere is a mistake here. It should be
உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு
Thank you, fixed the mistake.
Delete