ஆசையே அலை போலே (Aasaiyae alai polae)


படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
உணர்வு: அனுபவம்
ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன்


ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

பருவமென்னும் காத்திலே பறக்கும் காதல் தேரிலே
பருவமென்னும் காத்திலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா மணம்  பெறுமா முதுமையே சுகமா
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ
சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)