மனப்பார மாடு கட்டு (Mannapara maadu kattu)
படம்: மக்களை பெற்ற மகராசி
உணர்வு: பொறுப்பு
விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்வோமடா
உண்மையா உழைக்கிற நமக்கு
எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா
மனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு
மனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி
மனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு
ஆத்தூரு கிச்சடி சம்பா
ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வெதவெதச்சு
ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வெதவெதச்சு
நாத்த பறிச்சு நட்டு போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏத்த புடிச்சு ஏறச்சு போடு செல்லக்கண்ணு
நாத்த பறிச்சு நட்டு போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏத்த புடிச்சு ஏறச்சு போடு செல்லக்கண்ணு
கருத நல்ல விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு
கருத நல்ல விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லக்கண்ணு
என்னடா பல்ல காட்ற அட தண்ணிய சேந்து
கருத நல்ல விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லக்கண்ணு
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீ வித்து போட்டு பணத்த எண்ணு செல்லக்கண்ணு
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீ வித்து போட்டு பணத்த எண்ணு செல்லக்கண்ணு
சேத்த பணத்த சிக்கனம்மா செலவு செய்ய பக்குவம்மா
அம்மா கையில கொடுத்துபோடு சின்னக்கண்ணு
உங்க அம்மா கையில கொடுத்துபோடு சின்னக்கண்ணு
அவுங்க ஆற நூறா ஆக்குவாங்க செல்லக்கண்ணு
சேத்த பணத்த சிக்கனம்மா செலவு செய்ய பக்குவம்மா
அம்மா கையில கொடுத்துபோடு சின்னக்கண்ணு
அவுங்க ஆற நூறா ஆக்குவாங்க செல்லக்கண்ணு
Comments
Post a Comment