வாராயோ வெண்ணிலவே (Vaarayo vennilavae)

படம்: மிஸ்ஸியம்மா
உணர்வு: விரோதம்

வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலவே
அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதிநான்
சதிபதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே

வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலவே
வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதிநான்
வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதிநான்
நம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளிவேஷம்

வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலவே

தன்பிடிவாதம் விடாது என்மனம் போல் நடக்காது
தன்பிடிவாதம் விடாது என்மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது

வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலவே

அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே

வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலவே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)