பாத்தா பசுமரம் (Paatha pasumaram)
படம்: திருவிளையாடல்
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா
நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா
கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா
நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா
வட்டமிடும் காளையை பார் வாட்டசாட்டமா
வட்டமிடும் காளையை பார் வாட்டசாட்டமா
கூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா
கூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு
பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு
இவரு போன வருஷம் மழைய நம்பி வெதவெதச்சாரு
பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு
இவரு போன வருஷம் மழைய நம்பி வெதவெதச்சாரு
ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வச்சாரு
ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வச்சாரு
ஈசன் போட்ட கணக்கு மாறவில்லே போய் விழுந்தாரு
ஈசன் போட்ட கணக்கு மாறவில்லே போய் விழுந்தாரு
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
அறுவடையே முடிக்கும் முன்னே விதைக்கலாகுமா
அட ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேஷமா
அறுவடையே முடிக்கும் முன்னே விதைக்கலாகுமா
அட ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேஷமா
பத்து புள்ளே பெத்த பின்னும் எட்டு மாசமா
பத்து புள்ளே பெத்த பின்னும் எட்டு மாசமா
இந்த பாவிமகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா
இந்த பாவிமகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
Comments
Post a Comment