உள்ளத்திலே உரம் வேணுமடா (Ullathilae uram venumadaa)

படம்: விஜயபுரி வீரன்
உணர்வு: எழுச்சி

உள்ளத்திலே உரம் வேணுமடா உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா

வல்லவன் போலே பேசக்கூடாது வானரம் போலே சீறக்கூடாது

வாழத்தெரியாமலே கோழைத்தனமாகவே வாலிபத்தை விட்டு விட கூடாது
மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்

ஏட்டு சுரைக்காயெல்லாம் மூட்டை கட்டியாகணும்
நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்
ஏட்டு சுரைக்காயெல்லாம் மூட்டை கட்டியாகணும்
நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்
மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே
மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே

உள்ளத்திலே உரம் வேணுமடா உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா

உள்ளத்திலே உரம் வேணுமடா உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)