அதோ அந்த பறவை போல (Atho antha paravai pola)
படம்: ஆயிரத்தில் ஒருவன்
உணர்வு: எழுச்சி
ஆக்கம்: கண்ணதாசன்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம்
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம்
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம்
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம்
தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே பேசவில்லையே
வாழும் போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும் போது வேறு பாதை போகவில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம்
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம்
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிபாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம்
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம்
Comments
Post a Comment