தொடு தொடுவெனவே (Thodu thoduvenavae)

படம்: துள்ளாத மனமும் துள்ளும்
ஆக்கம்: வைரமுத்து

தொடு தொடுவெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடுவெனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோயில் போல் இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அன்பே எனை எங்கனம் காப்பாய்
கண்ணே உன்னை என்கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா
நான் சத்தியம் செய்யவா

இந்த பூமியே திர்ந்துபோய்விடில் என்னை எங்கு சேர்ப்பாய்
நட்சத்திரங்களை தூசு தட்டி நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகி போய்விடில் என் செய்வாய்
உருகிய துளிகளை ஒன்றாக்கி என்னுயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய் தானா
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை

தொடு தொடுவெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடுவெனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்

நீச்சல் குளமிருக்கு நீரும் இல்லை எதில் எங்கு நீச்சல் அடிக்க
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும் இந்த அல்லிராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என் பாடல்
காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைது செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சே அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திரலோகத்தை நான் கொண்டு தருவேன் நாளொரு பூவிதம்
உன் அன்பு அது போதும்

தொடு தொடுவெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடுவெனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோயில் போல் இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அன்பே எனை எங்கனம் காப்பாய்
கண்ணே உன்னை என்கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா
நான் சத்தியம் செய்யவா

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)