என்மேல் விழுந்த மழை துளியே (En mel vizhuntha maizhaithuliyae)

படம்: May மாதம்
உணர்வு: ஏக்கம், வியப்பு
ஆக்கம்: வைரமுத்து

என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நானிருந்தேன்

மண்ணை திறந்தால் நீரிருக்கும் என் மனதை திறந்தால் நீ இருப்பாய்
ஒளியை திறந்தால் இசை இருக்கும் என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும் என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும் என் இமையை திறந்தால் நீ இருப்பாய்

என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமையாய் விடுமோ

என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நானிருந்தேன்

என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)