மஞ்ச காட்டு மைனா (Manja kaattu maina)

படம்: மனதை திருடி விட்டாய்

மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே அவ காதல் சொல்லி போனா
காதல் கலவரம் பூக்கும் அதை இரவினில் மேலும் தாக்கும்
பூக்கள் பொதுக்குழு கூட்டும் நீ தலைமை தாங்க கேட்கும்

மஞ்ச காட்டு மைனா உன்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே இவ காதல் சொல்லி போனா
கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு
இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது
மாயனே மாயனே இது மன்மத கணக்கீடு
என் சுவாசம் என்னிடம் இல்லை
இது காதல் தேசத்தின் எல்லை

மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே அவ காதல் சொல்லி போனா
மஞ்ச காட்டு ஏ...
மஞ்ச காட்டு  ஓ..

ஆடை இருந்தது பார்வை நுழைந்தது கண்களின் வெற்றியடி
இரவினில் அடிக்கடி உன்னால் நெருக்கடி இருளுக்கு வெற்றியடா
கட்டுக்கடங்கவில்லை நிலைமை தான்
கட்டில் முழுக்க இனி வன்முறை தான்
ஓ விட்டுகொடுத்து விடு ஒருமுறை தான்
கல்யாணம் என்பது வேண்டும்

மஞ்ச காட்டு  ஓ ஏ ஏ ஏ ஏ
மஞ்ச காட்டு  ஓ ஏ ஏ ஓ ஏ ஏ
மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா

இதயம் துடிக்குது படையும் எடுக்குது சடங்கை துவங்கிடவா
சேலையும் பறந்தது பதவியை இழந்தது இடையில் தேர்தல் தான்
கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு வேகத்தடையும் ஒன்று இங்கிருக்கு
தடுத்து நிறுத்து என்ன விறுவிறுப்பு
பெண் நாணம் கொல்லுது பாரு

மஞ்ச காட்டு  ஓ ஏ ஏ ஓ ஏ ஏ
மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே அவ காதல் சொல்லி போனா
காதல் கலவரம் பூக்கும் அதை இரவினில் மேலும் தாக்கும்
பூக்கள் பொதுக்குழு கூட்டும் நீ தலைமை தாங்க கேட்கும்

மஞ்ச காட்டு மைனா உன்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே இவ காதல் சொல்லி போனா
ஓ லா..

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)