புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (Pullanguzhal koduththa moongilgalae)

பாடியவர்: T.M. சௌந்தர்ராஜன்
உணர்வு: தெய்வீகம்


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே
எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே
எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே
எங்கள் श्रीகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்
எங்கள் श्रीகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த श्रीரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் 
அந்த श्रीரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

பாஞ்சாலி புகழ் காக்க தன்கை கொடுத்தான்
அன்று பாரத போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாஞ்சாலி புகழ் காக்க தன்கை கொடுத்தான்
அன்று பாரத போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமை உள்ள பங்கை கொடுத்தான் 
நாம் படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான்
நாம் படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)