ராமா ராமா சீதைக்கேத்த மாமா (Raama raama seethaikkaetha)
படம்: Doubles
உணர்வு: போட்டி
ஆக்கம்: வைரமுத்து
பாடியவர்கள்: ஸ்வர்ணலதா, அனுராதா Shriram
உன் வில்லாய் நானும் வளைந்தேன் அம்பு பூட்டடா
கிருஷ்ணா கிருஷ்ணா ராதைக்கேத்த கிருஷ்ணா
உன் புல்லாங்குழலாய் வந்தேன் நீ வாசிடா
வீட்டில் என்னை ஆளும் புருஷா
காட்டில் கூட கற்புக்கரசா
ராஜ்ஜியம் துறந்துவிட்ட தலைப்பிள்ளையே
தாடியை துறக்கமட்டும் மனமில்லையே
அட மாதவ முகுந்தா
இவ மடியில் விழுந்தா
உன் பாடலை கேட்டு
இவ மறுபடி எழுந்தா
ராமா ராமா சீதைக்கேத்த மாமா
உன் வில்லாய் நானும் வளைந்தேன் அம்பு பூட்டடா
உலகத்தின் அழகெல்லாம் ஒன்று திரண்டு வந்தாலும்
சீதை போல் அழகில்லை என்பானே
எந்தன் காதல் ராமன் சீதாவின் மாமன்
உலகத்தின் அழகெல்லாம் ஒவ்வொன்றாய் ருசி பார்த்து
ராதை போல் பெண்ணில்லை என்பானே
எந்தன் காதல் கண்ணன் ராதையின் மன்னன்
அடி என்னை மட்டும் தொட்டு புது இன்பம் கொடுத்தவன் ராமன்
தன் அனுபவம் எல்லாம் சேர்த்து சுகம் அள்ளி தந்தவன் கண்ணன்
இவன் வில்லும் ஒன்று பெண்ணும் ஒன்று சொல்லும் ஒன்றடியோ
ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரேஹரே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ரே
sri ராம ராம ரே ரே ரே ராம ராம ரே
மனிதர்கள் பிழை செய்தால் தெய்வம் தான் மன்னிக்கும்
தெய்வங்கள் பிழை செய்தால் காணாமல் போவது தானே தர்மம்
மனிதர்களின் தர்மம்
தெய்வங்கள் பிழை சமுதாயம் பிழை செய்யும்
வழிகாட்டி வாழ்ந்தானே sri ராமன் தானே என்றும் தெய்வம்
வாழும் தெய்வம்
மோகம் தானே வாழ்க்கை
இதை தொட்டு சொன்னவன் கண்ணன்
தியாகம் தானே வாழ்க்கை
துயர் பட்டு சொன்னவன் ராமன்
கட்டில் போட்டியில் வெற்றி கோப்பைகள் என்றும் கண்ணனுக்கு
sri ராம ராம ராம ராம ஹரே ஹரே ராம ராம ராம ராம ரே
sri கிருஷ்ண கிருஷ்ண ரே ரே ரே ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ரே
ராமா ராமா சீதைக்கேத்த மாமா
உன் வில்லாய் நானும் வளைந்தேன் அம்பு பூட்டடா
கிருஷ்ணா கிருஷ்ணா ராதைக்கேத்த கிருஷ்ணா
உன் புல்லாங்குழலாய் வந்தேன் நீ வாசிடா
வீட்டில் என்னை ஆளும் புருஷா
காட்டில் கூட கற்புக்கரசா
ராஜ்ஜியம் துறந்துவிட்ட தலைப்பிள்ளையே
தாடியை துறக்கமட்டும் மனமில்லையே
அட மாதவ முகுந்தா
இவ மடியில் விழுந்தா
உன் பாடலை கேட்டு
இவ மறுபடி எழுந்தா ஓ ஓ...
Comments
Post a Comment